குடிமைப் பணி தேர்வுக்கான வயது வரம்பை குறைக்க முடியாது மத்திய அரசு திட்டவட்டம்…!!
குடிமைப் பணித் தேர்வுகளுக்கான வயது வரம்பை குறைக்கும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
மத்திய அரசுக்கு ஆலோசனை அளித்து வரும் நிதி ஆயோக் அமைப்பு மத்திய அரசுக்கு “புதிய இந்தியாவுக்கான கொள்கைகள் 75” என்ற தலைப்பில் பல்வேறு பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கையை தாக்கல் செய்தது.இந்த அறிக்கையில் I.A.S , I.P.S பணிக்கான குடிமைப் பணித் தேர்வில் பொதுப்பிரிவினருக்குள்ள தற்போதைய வயது வரம்பை 27 ஆக குறைப்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் இடம்பெற்றிருந்தன.இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட குடிமைப் பணித் தேர்வுக்கான வயதின் உச்ச வரம்பு தொடர்பாக வயதை குறைக்கும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.