African Union: ஜி20 அமைப்பில் இணைந்தது ஆப்பிரிக்க யூனியன்!
ஜி20 அமைப்பில் ஆப்பிரிக்க யூனியன் நிரந்தர உறுப்பினராக இணைவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இந்தியா தலைமையேற்று நடத்தும் ஜி20 மாநாடு இன்றும், நாளையும் நடக்க உள்ள நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், 18வது உச்சி மாநாடு டெல்லியில் தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாடு காலை 10 மணிக்கு மேல் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில், தற்பொழுது மாநாடு தொடங்கியுள்ளது. இதில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார், நாட்டின் 60க்கும் மேற்பட்ட நகரங்களில், 200க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடந்துள்ளன. இந்தியாவின் ஜி 20 தலைவர் பதவி நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் சேர்க்கும் அடையாளமாக மாறியுள்ளது. உலக நன்மைக்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு நடக்க வேண்டிய நேரம் இது.
அதன் அடிப்படையில், ஆப்பிரிக்க ஒன்றியத்தை நிரந்தர ஜி20 உறுப்பினராக்க இந்தியா முன்வந்துள்ளது. அனைத்து உறுப்பினர்களும் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்நிலையில், ஆப்பிரிக்க ஒன்றியம் அதிகாரப்பூர்வமாக ஜி20 அமைப்பில் சேரும்போது, G21 என மறுபெயரிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிரிக்க யூனியன் (AU) 55 நாடுகளை உள்ளடக்கியது, அதனை G20-ல் அது சேர்ப்பதினால் இரண்டாவது பெரிய குழுவாக மாறும்.