24 ஆண்டுகள் காங்கிரஸ் கோட்டையை தகர்த்த ஆம் ஆத்மி.! அரவிந்த் கெஜ்ரிவால் பெருமிதம்.!

Aravind Kejriwal

24 ஆண்டுகளாக காங்கிரஸ் வென்று வந்த பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மக்களவை தொகுதியில் தற்போது ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. 

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மக்களைவை தொகுதி காங்கிரஸ் எம்பி சந்தோக் சிங் சவுத்ரி, ஒற்றுமை யாத்திரையின் போது உயிரிழந்ததால் கடந்த 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் சார்பில் சந்தோக் சிங் சவுத்ரி மனைவி கரம்ஜித் கவுர் களமிறங்கினார். ஆம் ஆத்மி சார்பில் சுஷில் குமார் ரிங்கு களமிறங்கினர்.

நேற்று தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. அதில், 58 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சுஷில் குமார் ரிங்கு வெற்றிபெற்றார். கடந்த 24 ஆண்டுகளாக காங்கிரஸ் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியின் கோட்டை என கருதப்பட்ட ஜலந்தர் தொகுதியை தற்போது ஆம் ஆத்மி கைப்பற்றியுள்ளது.

இது குறித்து ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ஜலந்தர் தொகுதி வெற்றியானது பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு மக்கள் கொடுத்த பரிசு என கூறினார். மேலும். மக்களவைக்கு தேர்வாகும் முதல் ஆம் ஆத்மி வேட்பாளர் சுஷில் குமார் ரிங்கு எனவும் தெரிவித்தார். இதன் மூலம் தனது எம்பி கணக்கை ஆம் ஆத்மி கட்சி தொடங்கியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்