ஒரே இரவில் புகழின் உச்சத்தை தொட்ட 85 வயது மூதாட்டி!

Default Image

ஒரே நாளில் பாலிவுட் பிரபலங்களிடம் பாராட்டு பெற்றது மட்டுமல்லாமல், உலக சுகாதார அமைப்பிடமும் பாராட்டுகளை பெற்றுள்ளார் 85 வயது கொண்ட சிலம்பம் சுத்தும் மூதாட்டி.

தெருவோரத்தில் நின்று அட்டகாசமாக சிலம்பம் சுத்திய மூதாட்டியை கண்டு வியந்த பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ ஒரே நாளில் இணையத்தை கலக்கியது மட்டுமல்லாமல், பாலிவுட் நடிகர்கள் மற்றும் உலக சுகாதார அமைப்பின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள புனேவில் உள்ள குடிசை வீட்டில் வசித்து வருபவர் தான் சாந்தாபாய் கவார் எனும் 85 வயதுடைய மூதாட்டி, இவரது வயது முதிர்வால் கடினமான வேலைகளை செய்யமுடியவில்லை. எனவே அவரது தந்தையிடம் கற்றுக்கொண்ட சிலம்பத்தை வைத்து சாலையோரங்களில் சிலம்பம் சுத்தி கிடைக்கும் கொஞ்ச பணத்தை வைத்து தனது வாழ்க்கை பயணத்தை நடத்தி வந்துள்ளார்.

இந்த வீடியோவை கண்ட பாலிவுட் நடிகர்கள் சோனு சூத் மற்றும் ரிதேஷ் தேஷ்முக் ஆகியோர் பார்வையில் படவே, பாராட்டி வாழ்த்துதெரிவித்துள்ளனர். மேலும் சோனு சூத் மூதாட்டியை வைத்து சிலம்ப வகுப்பு நடத்தப்படும் என கூறியுள்ளார். மேலும், மூதாட்டியை உலக சுகாதார அமைப்பும் வியந்து பாராட்டியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்