ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய முடிவுகள்.! ரூ.2000க்கு கீழ் உள்ள பரிவர்த்தனைக்கு 18% வரி.?
இன்று நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் ஆலோசனை கூட்டத்தில் 2000 ரூபாய்க்கு கீழே மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பரிவர்தனைகளுக்கு சேவை கட்டணம் விதிக்கப்படும் நடைமுறை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
டெல்லி : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 54வது ஜி.எஸ்.டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் உள்ளிட்ட டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்தி 2000 ரூபாய்க்கு குறைவாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு நுழைவுக் கட்டணமாக (Gateway Fee) 18 சதவீதத்தை விதிக்க ஆலோசிக்கப்பட்டது.
ஆனால், இந்த ஆலோசனை கூட்டத்தில் இதுகுறித்த முக்கிய முடிவுகள், பரிந்துரைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அதேபோல, ஆயுள் மற்றும் உடல்நலம் குறித்த காப்பீடுகளுக்கு (இன்சூரன்ஸ்) விதிக்கப்படும் 18 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிப்பை குறைக்கவும் இந்த ஜி.எஸ்.டி கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.