தாயின் சடலத்துடன் ஒரு வாரமாக படுத்திருந்த 54 வயது மகன்!

Published by
Rebekal

உயிரிழந்த தனது தாயின் சடலத்துடன் மனநலம் பாதிக்கப்பட்ட 54 வயது மகன் ஒரு வாரமாக ஒரே வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

டெல்லியில் உள்ள உஸ்மான்பூர் எனும் பகுதியில் தனது 54 வயது மகனுடன் பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னொரு மகனும் மகளும் உள்ளனர் ஆனால் அவர்கள் வெளிநாட்டில் உள்ளனராம். அவருடன் வசிக்கும் 54 வயது மகனுக்கு மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில் தனது 54 வயது மகனுடன் வசித்து வந்த இந்தப் பெண்மணி கடந்த சில நாட்களுக்கு முன்பதாக இயற்கையாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தனது தாய் இறந்தது கூட தெரியாமல் மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த அவரது மகன் அந்த தாய் உடனேயே ஒரு வார காலமாக அந்த வீட்டிலிருந்துள்ளார்.

அண்டை வீட்டில் இருந்தவர்கள் தங்கள் வீட்டிற்கு அருகே துர்நாற்றம் வீசுவதாகவும் அந்த பெண்மணியின் வீட்டுக்கதவு பூட்டப்பட்ட நிலையிலேயே இருப்பதாகவும் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். எனவே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உள்பக்கமாக பூட்டி இருந்த கதவை உடைத்து பார்த்த போது கிட்டத்தட்ட இறந்து ஒரு வாரத்திற்கு  மேலாக இருக்க கூடிய சிதைந்த நிலையிலான பெண்மணியின் சடலத்தை கண்டு அதிர்ந்து உள்ளனர்.

மேலும் வீட்டிற்குள் சென்று பார்த்த பொழுது அவரது 54 வயது மன நோயாளியான மகனும் தனது தாயுடன் இருந்துள்ளார். மேலும் அவர் ஒரு வாரமாக உணவின்றி சரியான கவனிப்பு இன்றி மிக மோசமான நிலையில் இருந்துள்ளார். உடனடியாக உடல் சிதைந்த நிலையில் இருந்த பெண்ணின் சடலத்தை அவ்விடத்தில் இருந்து அகற்றிய போலீசார், அவரது மகனையும் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்பொழுது அந்த நபருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அப்பெண்மணியின் மரணத்திற்கு வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Published by
Rebekal

Recent Posts

பாஜக கூட்டத்தில் அடுத்தடுத்த டிவிஸ்ட்., பேனர் மாற்றம்! நயினார் நாகேந்திரன் புகைப்படம்!

பாஜக கூட்டத்தில் அடுத்தடுத்த டிவிஸ்ட்., பேனர் மாற்றம்! நயினார் நாகேந்திரன் புகைப்படம்!

சென்னை : அடுத்தடுத்த பரபரப்பான நிகழ்வுகளுடன் பாஜக அரசியல் களம் நகர்ந்து வருகிறது. மத்திய அமைச்சரும் , பாஜக தேசிய…

4 minutes ago

”டாக்சிக் மக்களே… இது தான் பெயரில்லா கோழைத்தனம்” – த்ரிஷாவின் காட்டமான பதிவு.!

சென்னை : அஜித்தின் 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை த்ரிஷா, இப்படம்…

42 minutes ago

பொன்முடியின் அமைச்சர் பதவி பறிக்கப்படுமா? மு.க.ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனை!

சென்னை :  திமுக அமைச்சர் பொன்முடி அண்மையில் ஒரு நிகழ்வில் பேசுகையில், இரு சமயத்தாரை குறிப்பிட்டு உடலுறவு குறித்து மறைமுகமாக…

44 minutes ago

“நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன்.,” அமைச்சர் துரைமுருகன் பகிரங்க வருத்தம்!

சென்னை : திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அண்மையில் தனது தொகுதியான காட்பாடியில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள்…

2 hours ago

அமைச்சர் பொன்முடி பதவியில் திருச்சி சிவா! மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு!

சென்னை : திமுக அமைச்சர் பொன்முடி அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசுகையில், உடலுறவு குறித்து மறைமுகமாக இரு சமூகத்தை…

3 hours ago

தமிழிசையின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறிய அமித் ஷா.!

சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை சௌந்தரராஜன் வீட்டிற்கு நேரில் சென்று…

3 hours ago