45 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் – 20 மாதங்கள் கழித்து நேரடியாக பங்கேற்பா?..!

Default Image

இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 45 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது.

நாட்டின் 45 வது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் இன்று காலை 11 மணியளவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் லக்னோவில் நடைபெறவுள்ளது.இந்த கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மற்றும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

நாட்டில் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, 2019-ல் கடைசியாக இதுபோன்ற கூட்டம் நடைபெற்ற நிலையில், கிட்டத்தட்ட 20 மாதங்கள் கழித்து தற்போது அதிகாரிகள் நேரடியாக பங்கேற்று நடத்தப்படவுள்ள (முதல் ஆன்-கிரவுண்ட்) ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இதுவாகும்.

அஜெண்டா:

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மறைமுக வரி:

இக்கூட்டத்தில், பெட்ரோல் மற்றும் டீசலை மறைமுக வரி வரம்பிற்குள் கொண்டு வருவது மற்றும் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு பற்றாக்குறை ஆகியவை பற்றி விவாதிக்க வாய்ப்புள்ளது.

கொரோனா அத்தியாவசிய மருந்துகள் மீதான ஜிஎஸ்டி விகித குறைப்பு நீட்டிப்பு :

அதாவது,கொரோனா சிகிச்சைக்குத் தேவையான நான்கு முக்கிய மருந்துகளான டோசிலிசுமாப், ஆம்போடெரிசின் பி, ரெம்டெசிவிர் மற்றும் ஹெப்பரின் போன்ற மருந்துகளின் மீதான வட்டி 12 சதவிகிதத்திலிருந்து ஐந்து சதவிகிதமாக குறைக்கப்பட்டது,இந்த மருந்துகளின் மீதான வட்டி குறைப்பு தற்போது செப்டம்பர் 30, 2021 வரை செல்லுபடியாகும்.தற்போது, அவை டிசம்பர் வரை நீட்டிக்க விவாதிக்க வாய்ப்புள்ளது.

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு பற்றாக்குறை:

ஏப்ரல் 2020 முதல் ரூ. 1,13,000 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு மாநிலங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனா பாதிப்பு இருப்பதால் ஜிஎஸ்டி மற்றும் ஜிஎஸ்டி செஸ் வசூலில் முழு இழப்பீட்டுத் தேவையையும் பூர்த்தி செய்ய ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியில் உள்ள தொகை போதுமானதாக இல்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜிஎஸ்டி கவுன்சில் இன்று ஜிஎஸ்டி இழப்பீட்டு பற்றாக்குறையை ஈடுசெய்ய இருக்கும் விருப்பங்களை பரிசீலிக்கலாம்.

உணவு சேவை விநியோக சேவைகளை ஜிஎஸ்டியின் கீழ் சேர்த்தல்:

ஜிஎஸ்டி கவுன்சில் இன்று உணவு பரிமாறுதல், தயாரித்தல் மற்றும் உணவு விநியோக சேவைகளை (டேக்அவே, டோர் டெலிவரி சேவைகள் உட்பட) “உணவக சேவை” என்று கருதுவதற்கான ஒரு ஆலோசனையை விவாதிக்க வாய்ப்புள்ளது. ஆதாரங்களின்படி, இந்த சேவைகள் ஐந்து சதவீத ஜிஎஸ்டியை ஈர்க்கக்கூடும்.

மேலும் ஜிஎஸ்டி கவுன்சில் இந்த முன்மொழிவை அங்கீகரித்தால், ஜொமாடோ, ஸ்விகி போன்ற முக்கிய உணவு விநியோக பயன்பாடுகள் ஐந்து சதவிகித ஜிஎஸ்டி ஸ்லாப்பின் கீழ் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்