புதிய மத்திய அமைச்சர்கள் இன்று மாலை 6 மணிக்கு பதவியேற்பு.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இரண்டாவது முறையாக பதவியேற்றதற்கு பிறகு முதல் முறையாக இன்று அமைச்சரவை விரிவாக்கத்துடன் மாற்றம் செய்யப்பட உள்ளது.மேலும்,மத்திய கூட்டுறவு அமைச்சகம் என்ற புதிய அமைச்சகத்தை தொடங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்த புதிய அமைச்சகம் கூட்டுறவு நிறுவனங்களுக்கான வணிகத்தை எளிதாக்கவும், நாடு முழுக்க கூட்டுறவு துறையை கவனிப்பதற்காகவும் மற்றும் மாநில கூட்டுறவு நிறுவனங்களின் வளர்ச்சியை மேம்படுத்த உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுக்க ஒரே மாதிரியான கூட்டுறவு கொள்கையை உருவாக்க இந்த துறை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,43 புதிய மத்திய அமைச்சர்களின் பதவியேற்பு விழாவானது இன்று மாலை 6 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ளது.குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் இந்த பதவி பிரமாணத்தை செய்து வைப்பார்.
அதன்படி,புதிதாக பதவி ஏற்கவுள்ள அமைச்சர்களில் 12 பேர் பட்டியல் வகுப்பினர்,8 பேர் பழங்குடியினர்,ஓபிசி பிரிவிலிருந்து 27 பேருக்கும் வாய்ப்புள்ளது என்றும்,மேலும்,சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மத்திய அமைச்சரவையில் முக்கியத்துவம் அளிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…