நிதியமைச்சர் தலைமையில் 41-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது.!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொளி மூலம் 41-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியுள்ளது.
கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக தொழில்கள், உற்பத்தி முடங்கி உள்ளதால் ஜி.எஸ்.டி வரியைச் செலுத்த முடியாமல் வியாபாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், மாநில அரசுகளுக்கு கடும் வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம் ஜிஎஸ்டியால் மாநிலங்களுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை ஈடுசெய்ய மத்திய அரசு இழப்பீட்டு தொகையை வழங்கி வருகிறது. இதையடுத்து, இழப்பீட்டுத் தொகையை வழங்கும்படி மத்திய அரசுக்கு பல்வேறு மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 41-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியுள்ளது. காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாநில நிதியமைச்சர், நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். மேலும், இந்த கூட்டத்தில் மாநிலங்களுக்கு வரி வருவாய் இழப்பை ஈடு செய்வதற்கான நிதி ஒதுக்குவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.