கொரோனா வைரஸ் மூன்றாவது அலை உருவாவதற்கான சாத்தியங்கள் உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில், இந்த வைரஸ் குறித்த ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த வைரசை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவை பொருத்தவரையில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், மத்திய மாநில அரசுகள் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் அடிப்படையில், தற்போது தொற்று பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது.
இந்நிலையில், ஹைதராபாத் மற்றும் கான்பூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐஐடி) யில் மதுக்குமல்லி வித்யாசாகர் மற்றும் மணீந்திரா அகர்வால் தலைமையில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் மூலம் வெளியான ஆய்வறிக்கையின்படி ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை உருவாவதற்கான சாத்தியங்கள் உள்ளதாகவும், அக்டோபர் மாதத்தில் அது உச்சத்தை தொடும் என்றும் கூறப்படுகிறது.
கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதைப் பார்க்கும்போது மூன்றாவது அலை உருவாகலாம் என்றும் இரண்டாவது அலையை போன்று, மூன்றாவது அலையில் பாதிப்பு இருக்காது என்றும் கூறப்படுகின்றது. மேலும் இரண்டாவது அலையின் போது அதிகபட்சமாக 4 லட்சம் வரை மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால் இந்த மூன்றாவது அலையில் குறைந்தது ஒரு லட்சம் அல்லது அதிகபட்சமாக 1.50 லட்சம் வரை தொற்று பாதிப்பு மக்கள் ஆளாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…