அதிர்ச்சி தகவல் ! கொரோனாவின் 2வது அலை 5 வயதுக்கு குறைவான குழந்தைகளை அதிகமாக பாதிக்கிறது

Default Image

கொரோனாவின் இரண்டாவது அலையில் 5  வயதுக்கு குறைவான பல குழந்தைகள் பாதிக்கப்பட்டு  இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதகிகரித்து வரும் கொரோனாவின் இரண்டாவது அலை முன்பு இல்லாத அளவுக்கு  மாற்றமடைந்துள்ளது, அதிக குழந்தைகளின் உடல்நலத்தை பாதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது, பல மருத்துவமனைகளில்  ஒன்று முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளின் எண்ணிக்கையில் அதிகமாக  உயர்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.சிலர் ஒன்றரை மாத வயதுடைய குழந்தைகள் கூட மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

மருத்துவர்களின் எச்சரிக்கை:

corona vaccine india

சர் கங்கா ராம் மருத்துவமனையின் குழந்தை தீவிர சிகிச்சையாளர் டாக்டர் டிரேன் குப்தா கூறுகையில், “தற்போதைய எழுச்சியில் உள்ள இந்த வைரஸ் குழந்தைகளுக்கு அதிகமாக பரவி வருகிறது.கொரோனாவுடன் மருத்துவமனைக்கு வரும் ஒன்று முதல் ஐந்து வயது வரை இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. கொரோனா மற்றும் நிமோனியாவுடன் ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டுள்ளது என்றார்.

ஃபோர்டிஸ் மருத்துவமனையின் குழந்தை மற்றும் நியோனாட்டாலஜி இயக்குநர் டாக்டர் ராகுல் நாக்பால் கூறுகையில்,நாங்கள் இப்போது கொரோனா பாதித்து வரும்  எல்லா வயதினரை விட  அதிகமான குழந்தைகள் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வருகின்றனர்.கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை மிகச்சிறியதாக இருந்தது, ஆனால் இது இந்த முறை அதிவேகமாக அதிகரித்துள்ளது.

அறிகுறிகளும் எச்சரிக்கையும்:

coronavirus

கொரோனா அறிகுறிகள் அதன் பிறழ்வு(DNA மாற்றம்) காரணமாக வேறுபடுகின்றன. தொண்டை புண் தவிர, காய்ச்சல்,வயிற்றுப்போக்கு, நரம்பியல் பிரச்சினைகள் போன்றவைகள் ஏற்படுகின்றன. உமிழ்நீர் இல்லாததால் வறண்ட வாய் (ஜெரோஸ்டோமியா), கோவிட் நாக்கு மற்றும் வாய் புண்ணுக்கு வழிவகுக்கிறது. குழந்தைகள் மூச்சுத்திணறல் அல்லது பசியின்மை ஆகியவற்றால் பாதிக்கப்படலாம்.

உங்கள் குழந்தைகளில் எந்த அறிகுறிகளையும் ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள்; உங்கள் பிள்ளை அனுபவிக்கும் எந்தவொரு உடலில் ஏற்படும் சிறு பிரச்சனைகள் மீது ஒரு கண் வைத்திருங்கள், ஏனென்றால் தலைவலி, தேவையற்ற சோர்வு ஆகியவை பொதுவானவை அல்ல,அதுவும் கொரோனா பதிப்பின் விளைவுகளாக கூட இருக்கலாம்.

எதிர்ப்பு சக்தியின் அளவு:

antibodies

டெல்லியில் ஐந்தாவது சுற்று செரோலாஜிகல் சோதனையின்  போது கணக்கெடுக்கப்பட்ட குழந்தைகளில் குறைந்தது 50 சதவீதம் பேர் கொரோனாவுக்கு  க்கு எதிராக ஆன்டிபாடிகள்  பெரியவர்களுக்கு நிகராக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகள் பற்றிய சோதனை ஜனவரி 15 முதல் ஜனவரி 23 வரை 28,000 நபர்களிடம் நடத்தப்பட்டது. பெண்களில் 52.49 சதவிகிதம் பேர்  ஆன்டிபாடிகள் பெற்று இருக்கின்றனர். அதை ஒப்பிடுகையில் ஆண்களிடத்தில்  48.41 சதவீத வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 5 வயதிலிருந்து 12 வயதுக்கு உட்பட்ட 1,307 குழந்தைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

மக்களின் கவனக்குறைவு:

corona vaccine india

இதுபற்றி மருத்துவர்கள் கூறுகையில்,கொரோனா தொற்று சில நாட்களாக அதிகரிக்க காரணம் மக்களின் அசாதாரண போக்கே என்று கூறுகின்றனர்.அதே வேளையில் குழந்தைகளிடத்தில் கொரோனாவின் பாதிப்பு மிக அதிகமாக இல்லை என்றாலும், குடும்பத்தில் வேறு யாரும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் கொரோனாவுக்கான -பொருத்தமான நடத்தை வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்த இரண்டாவது அலை பல குழந்தைகளை பாதிக்கிறது, குறிப்பாக ஐந்து வயதுக்கு குறைவானவர்கள். ஏனென்றால், ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால்,மக்களிடத்தில் ஒரு பயமில்லாத பொறுப்பின்மை அதிகரித்துள்ளது.

உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்:

அதிர்ஷ்டவசமாக, இளைய குழந்தைகள் அதிகம் கஷ்டப்படுவதில்லை, ஆனால் அவர்கள் கஷ்டப்படுவதில்லை என்று அர்த்தமல்ல. குழந்தை மூன்று நாட்களுக்கு அப்பால் அதிக காய்ச்சல், எரிச்சலூட்டுதல், சாப்பிட மறுத்தல், சுவாசக்கோளாறு  அல்லது கடுமையான வயிற்று வலி அல்லது வயிற்றுப்போக்கு ஏற்பட்டால்,குழந்தையை உடனடியாக மருத்துவரை விரைவில் தொடர்பு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்