ஜம்மு காஷ்மீரில் விறுவிறு வாக்குப்பதிவு.! தற்போதைய நிலவரம் இதோ…

ஜம்மு காஷ்மீரில் இன்று 26 தொகுதிகளுக்கு 2ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் தொடங்கிய வாக்குபதிவில் 9 மணி வரை 10.22% வாக்குகள் பதிவாகியுள்ளன.

2nd Phase of Election in Jammu Kashmir

டெல்லி : ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பிறகு நடைபெறும் முதல் சட்டமன்ற தேர்தல் கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கியது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் அன்றைய தினம் (செப்டம்பர் 18) 24 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதனை தொடர்ந்து, இன்று (செப்டம்பர் 25) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 26 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஜம்மு பகுதியில், ரியாசி, ரஜெளரி, பூஞ்ச் ஆகிய மாவட்டங்களிலும் , காஷ்மீா் பகுதியில், ஸ்ரீநகா், புத்காம், கந்தா்பால் ஆகிய மாவட்டங்களிலும் உள்ள 26 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 9 மணி வரையிலான நிலவரப்படி 10.22% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.

இன்றைய தேர்தலில் 239 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 25 லட்சம் வேட்பாளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 3,502 வாக்குச்சாவடிகளில் இந்த தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று மாலை 6 மணி வரையில் இந்த தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும்.

” நமது ஜனநாயகத்தை வலுப்படுத்த அனைவரும் வாக்களிக்க வரவேண்டும்.” எனவும், “முதன் முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்களுக்கு எனது வாழ்த்துக்கள்” என்றும் பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி 24 தொகுதிகளில் நடைபெற்ற முதற்கட்ட வாக்குபதிவில் மொத்தம் 61.38 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. இன்று 26 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. மீதம் உள்ள 40 தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 1ஆம் தேதியன்று 3ஆம் கட்ட தேர்தல் நாளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த முடிவுகள் வரும் அக்டோபர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்