இன்று ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் 2-வது தவணை ஹைதராபாத் வந்தது..!

2-வது கட்டமாக இன்று தனிவிமானத்தில் ஹைதராபாத்திற்கு ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் வந்து சேர்ந்தன.
கொரோனாவின் இரண்டாவது அலைக்கு எதிராக தற்போது இந்தியாவில் கோவாக்ஸின், கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, மூன்றாவது மருந்தாக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கியது.
ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் இந்தியாவில் இறக்குமதி செய்து வழங்கி வருகிறது. ரஷ்யா தடுப்பூசியான 1.5 லட்சம் ஸ்புட்னிக் V முதல் தொகுதி ஹைதராபாத்திற்கு கடந்த 1-ஆம் தேதி வந்து சேர்ந்தது. இந்நிலையில், 2-வது கட்டமாக இன்று தனிவிமானத்தில் ஹைதராபாத்திற்கு ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் வந்து சேர்ந்தன.
ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள ஸ்புட்னிக்-வி தடுப்பூசி விலை ரூ. 995.40-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்புட்னிக்-வி தடுப்பூசி விலையான ரூ.948 எனவும் அதனுடன் 5% ஜிஎஸ்டி வரி சேர்த்து விற்பனை விலை ரூ. 995.40 என டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025