டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 23வது கூட்டம் தொடங்கியது..!

Published by
லீனா

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 23வது கூட்டம் டெல்லியில் தொடங்கியது.  தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாள் சந்தீப் சக்சேனா மற்றும் காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாடு, கர்நாடக அரசு முன்வைத்த கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

புதுச்சேரி அரசு சார்பில் தலைமை பொதுப்பணித்துறை பொறியாளர் பழனியப்பன்  காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றார். காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் புதுச்சேரி, கேரளா, கர்நாடக மாநில அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். காவிரி நீர் மேலாண்மை கூட்டத்தில் தமிழக அரசின் நீர் பங்கீடு தொடர்பான அவசர மனு மீது முடிவு எடுக்கப்பட உள்ளது.

காவிரியில் இருந்து 15 நாட்கள் 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்திருந்தது. 10 நாட்களுக்கு 24 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. தமிழக  அரசு தொடர்ந்த அவசர மனு மீது காவிரி மேலாண்மை ஆணையம் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருந்த நிலையில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள், காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் திறப்பது போதாது. தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 24,000 கன அடி நீர் கிடைத்தால் தான் நன்றாக இருக்கும். இது இன்று டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என தெரிவித்து இருந்தார்.

Published by
லீனா

Recent Posts

பிரபல ரவுடி பாம் சரவணன் துப்பாக்கி முனையில் கைது.!

சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…

42 minutes ago

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!

நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில்,  தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…

16 hours ago

இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!

புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…

17 hours ago

அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?

"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால்  பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…

20 hours ago

ரசிகர்களுக்கு செம சர்பிரைஸ்.! போட்டோவோடு வெளியான ‘வாடிவாசல்’ அட்டகாச அப்டேட்!

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…

20 hours ago

ரூ.5 லட்சம் பரிசு.., ஒரு சவரன் தங்கப்பதக்கம்! முதலமைச்சர் வழங்கிய தமிழக அரசு விருது லிஸ்ட் இதோ…

சென்னை :  z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…

21 hours ago