Ram Temple - Pran Pratistha [File Image]
உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி 22ஆம் தேதி திங்களன்று வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 16ஆம் தேதி (செவ்வாய்) அன்று சிறப்பு பூஜைகள் உடன் விழா தொடங்கியது.
கிருஷ்ண ஜென்ம பூமி வழக்கு..அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை..!
சிறப்பு பூஜைகள் தொடங்கிய இரண்டாம் நாளான நேற்று (புதன்கிழமை) மாலை ராமர் சிலை அயோத்தி கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. கருவறைக்குள் வைக்கப்பட உள்ள இந்த சிலையை மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் வடிவமைத்துள்ளார். சுமார் 200 கிலோ எடையுள்ள இந்த ராமர் சிலை கிரேன் மூலம் கொண்டுவரப்பட்டது.
ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட கருவறை ராமர் சிலையானது, அயோத்தியில் உள்ள ஹனுமன்கர்ஹி கோவிலில்நேற்று வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கருவறைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பூஜைகள் செய்யப்பட்ட பிறகு இன்று கோவில் கருவறைக்குள் ராமர் சிலை வைக்கப்படும் என ஸ்ரீ ராம் மந்திர் கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து , வரும் திங்கட்கிழமை (ஜனவரி 22) பிரான் பிரதிஷ்டை விழாவின் போது ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரதிஸ்டை செய்யப்படும். அன்றைய நாள் விழாவுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா, யோகி ஆதித்யநாத் என பல்வேறு முக்கிய அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் வரவுள்ளனர். இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை : கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச் 14இல்…
ஜெய்ப்பூர் : பீகாரில் இருந்து வந்த 14 வயது சின்ன பையன் வைபவ் சூர்யவன்சி நேற்று ஐபிஎல் போட்டியில் செய்த…
மதுரை : தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழாமிக முக்கியமான மற்றும் உலகப் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும்.…
சென்னை : இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதற்கு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் சார்பாக மானிய கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…