200 கிலோ ராமர் சிலை.. கிரேன் மூலம் அயோத்தி கோயிலுக்கு வருகை.!

Ram Temple - Pran Pratistha

உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி 22ஆம் தேதி திங்களன்று  வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 16ஆம் தேதி (செவ்வாய்) அன்று சிறப்பு பூஜைகள் உடன் விழா  தொடங்கியது.

கிருஷ்ண ஜென்ம பூமி வழக்கு..அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை..!

சிறப்பு பூஜைகள் தொடங்கிய இரண்டாம் நாளான நேற்று (புதன்கிழமை) மாலை ராமர் சிலை அயோத்தி கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. கருவறைக்குள் வைக்கப்பட உள்ள இந்த சிலையை மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் வடிவமைத்துள்ளார். சுமார் 200 கிலோ எடையுள்ள இந்த ராமர் சிலை கிரேன் மூலம் கொண்டுவரப்பட்டது.

ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட கருவறை ராமர் சிலையானது, அயோத்தியில் உள்ள ஹனுமன்கர்ஹி கோவிலில்நேற்று வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கருவறைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பூஜைகள் செய்யப்பட்ட பிறகு இன்று கோவில் கருவறைக்குள் ராமர் சிலை வைக்கப்படும் என ஸ்ரீ ராம் மந்திர் கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து , வரும் திங்கட்கிழமை (ஜனவரி 22) பிரான் பிரதிஷ்டை விழாவின் போது ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரதிஸ்டை செய்யப்படும். அன்றைய நாள் விழாவுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா, யோகி ஆதித்யநாத் என பல்வேறு முக்கிய அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் வரவுள்ளனர். இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - AUS vs IND
muthu ,meena (4) (1)
Suburban Railway - MTC Chennai
SPVelumani
Seeman - Rajini
goat vijay sk rajinikanth