தீவிரவாதி அப்சல் குரு கூறியது மெய்யானது.. தீவிரவாதிகளுடன் டி.எஸ்.பிக்கு பல ஆண்டுகளாக தொடர்பு.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்..

Published by
Kaliraj
  • தீவிரவாதிகளுடன் கைது செய்யப்பட்ட டி.எஸ்.பி பல ஆண்டுகளாக தீவிரவாதிகளுடன் தொடர்பு.
  • இந்த டி.எஸ்.பி குறித்து அப்சல் குரு பல ஆண்டுக்கு முன்பே கூறியது உண்மையானது

கடந்த சனிக்கிழமை 11ம் தேதி காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின்  ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் காவல் துறையினரின்  வாகன சோதனையில் ஒரு கார் நிற்காமல் சென்றது. அந்த காரை போலீஸார் விரட்டிச் சென்று ஜம்முவின் மிர் பஜார் பகுதியில் வைத்து  பிடித்தனர். அந்த காரை காவல்துறை டிஎஸ்பி தாவிந்தர் சிங் ஓட்டிச் சென்றதும் அவருடன்  இரண்டு  தீவிரவாதிகளும் ஒரு வழக்கறிஞரும் காரில் இருப்பதும் தெரியவந்தது. பின் நடத்த்ப்பட்ட விசாரணையில்,  மிக நீண்ட காலமாக ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகளுடன் தாவிந்தர் சிங்கிற்கு நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. அந்தஅமைப்பை சேர்ந்த தீவிரவாதிகளான  நவீத் பாபு, ரஃபி, வழக்கறிஞர் இர்பான் ஆகியோரும் அந்த  காரில் இருந்தனர். இதில், நவீத் பாபுவையும் ரஃபியையும் சண்டிகருக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்ல டிஎஸ்பி தாவிந்தர் சிங் ரூ.12லட்சத்தை லஞ்சமாக பெற்றுள்ளார் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார். அவருடன் இருந்த தீவிரவாதி நவீத் பாபு பாதுகாப்பு பணியில் இருந்த பல காவல்துறையினரை சுட்டுக் கொன்றுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் கடந்த 2001-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தாக்குதலின்போது கைது செய்யப்பட்ட தீவிரவாதி  அப்சல் குரு, அப்போதே  டிஎஸ்பி தாவிந்தர் சிங் பெயரை குறிப்பிட்டான். ஆனால் அப்போது  போதிய ஆதாரம் இல்லாததால் அவர் சிக்கவில்லை. தாவிந்தர் சிங்கிற்கு இப்போது 57 வயது .எனவே இவர்,இவ்வளவு காலம்தீவிரவாதிகளுடன் கைகோத்து காவல்துறையினருக்கு  துரோகம் இழைத்துள்ள  மன்னிக்க முடியாத பெறும் குற்றத்தை  செய்துள்ளார். அவருக்கு தகுந்த தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். என்று  தெரிவித்துள்ளனர்.

Published by
Kaliraj

Recent Posts

பரபரப்பாக மேட்ச்.., சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற டெல்லி.!

பரபரப்பாக மேட்ச்.., சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற டெல்லி.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…

2 hours ago

நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!

நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

3 hours ago

மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…

4 hours ago

“விஜய்யிடமிருந்து முஸ்லிம்கள் தள்ளி இருங்கள்” – அகில இந்திய முஸ்லிம் ஜமாத்.!

சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…

4 hours ago

அதிரடி காட்டுமா ராஜஸ்தான்.? பேட்டிங் செய்ய களமிறங்கும் டெல்லி.! பிளேயிங் லெவன் இதோ…

டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…

6 hours ago

“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!

சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…

7 hours ago