தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழ் மக்களுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
தேர்தல் முடிவுகளில் திமுக முன்னிலை பெற்ற நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். அதில் நாட்டின் வளர்ச்சிக்காகவும், மாநிலத்தின் தேவைகளை நிறைவேற்றுவதற்க்காகவும் மற்றும் கொரோனாவை வீழ்த்துவதற்கு இணைந்து செயல்பட வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். மாநில நலனுக்காகவும் பெருமைமிகு தமிழ் பண்பாட்டை மென்மேலும் பறைசாற்றவும் நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம் என்று தமிழக மக்களுக்கு உறுதியளிக்கிறேன். கடினமாக உழைத்த நமது தொண்டர்களைப் பாராட்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழில் அந்த செய்தியை பதிவிட்டிருந்த நிலையில், தற்போது பிரதமரும் தமிழில் இந்த செய்தியை பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, தமிழகத்தின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.
அதில், திமுக 158 இடங்களில் முன்னிலை வகித்து, முதல் முறையாக திமுக தலைவர் முக ஸ்டாலின் முதல்வர் பொறுப்பேற்கிறார். அதிமுக கூட்டணி 76 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதுபோல அதிமுக கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிட்ட பாஜக, 4 முதல் 5 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் "விடுதலை 2" படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'தினம்…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங்கை கடந்த ஜூலை மாதம் ஒரு கும்பல்…