பணியை முடிக்க தன் மீது நம்பிக்கை வைத்த ராஜஸ்தான் முதல்வர் கெலாட்டுக்கு, பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானின் முதல் வந்தே பாரத்:
ராஜஸ்தான் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின், அறிமுக விழாவில் , பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளி மூலம் திறந்துவைத்தார். இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை நண்பர் என்று குறிப்பிட்டு பாராட்டினார்.
நெருக்கடி சூழல்:
மேலும் காங்கிரஸ் கட்சியில் தற்போது அரசியல் நெருக்கடிகள் நிலவி வருகிற சூழ்நிலையிலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக கெலாட்டை, பிரதமர் பாராட்டி பேசினார். இந்த சூழ்நிலையில் கெலாட் பல அரசியல் நெருக்கடிகளை சந்தித்து வந்தாலும், அதையும் மீறி ராஜஸ்தான் வளர்ச்சிப் பணிகளுக்காக நேரத்தை ஒதுக்கி, இந்த ரயில்வே திட்டத்தில் பங்கேற்றதால் அவருக்கு எனது சிறப்பு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
நட்பின் நம்பிக்கை:
இந்த வந்தே பாரத் துவக்கிவைக்கும் விழாவில், ரயில்வே அமைச்சர் அஷ்வின் வைஷ்னவ், ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் மூன்று மாவட்ட ரயில்வே தலைமையகங்களையும், ஒரே ரயில் இணைப்புடன் இணைக்க வேண்டும் என்ற முதல்வர் கெலாட்டின் கோரிக்கைக்கு பதிலளித்த மோடி, இது சுதந்திரம் கிடைத்த உடனேயே செய்ய வேண்டிய பணி, இதுவரை நடக்கவில்லை.
ஆனால் நம்பிக்கை வைத்து இந்த பணியை என் முன் வைத்துள்ளீர்கள், இந்த நம்பிக்கை நமது நட்பின் பலம், நட்பின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி என பிரதமர் மோடி தெரிவித்தார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…