மத்திய பட்ஜெட்டில் காங்கிரஸின் தேர்தல் அறிக்கைகள்.! பா.சிதம்பரம் மகிழ்ச்சி.!

Finance Minister Nirmala Sitharaman - Congress Leader P.Chidambaram

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை இன்று பட்ஜெட் அறிக்கையில் குரிப்பிட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மத்திய பட்ஜெட் 2024-ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். அதில் ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகியோருக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இளைஞர்களுக்கான திட்டத்தில், 1 லட்சம் ஊதியம் வரையில் புதியதாக வேலைக்கு சேரும் இளைஞர்களுக்கு மத்திய சார்பாக அதிகபட்சம் 15 ஆயிரம் வரையில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும்,  தொழில் நிறுவனங்களில் அப்ரன்டீஸ் பயிற்சி மேற்கொள்ளும் இளைஞர்களுக்கு மாதம் 5000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டமும் இன்று அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பா.சிதம்பரம் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில்,  மாண்புமிகு நிதியமைச்சர்., தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை 2024ஐ பட்ஜெட் உரையில் அறிவித்தார் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

காங்கிரஸ் அறிக்கையின் பக்கம் 30இல் கோடிட்டு குறிப்பிடப்பட்டுள்ள, புதிய வேலைவாய்ப்புடன் ஊக்கத்தொகை (ELI) வழங்கும் திட்டத்தை நிதியமைச்சர் கிட்டத்தட்ட ஏற்றுக்கொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

அதேபோல, காங்கிரஸ் அறிக்கையின் பக்கம் 11இல் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு அப்ரண்டீஸ் பயிற்சியாளருக்கும் உதவித்தொகையுடன் பயிற்சித் திட்டத்தை நிதியமைச்ர் அறிமுகப்படுத்தியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

காங்கிரஸ் அறிக்கையில் உள்ள வேறு சில யோசனைகளை மத்திய நிதியமைச்சர்  கூறியிருந்தால்  தவறவிட்ட அறிவிப்புகளை விரைவில் பட்டியலிடுகிறேன் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டு இருந்தார் என்று பா.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்