ஃபிட் இந்தியா இயக்கத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி – பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி ஃபிட் இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார்.அதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், ஓடுங்கள் அல்லது சைக்கிளிங் செய்யுங்கள். உடல் செயல்பாடு தொழில்நுட்ப வளர்ச்சியால் குறைந்துள்ளது. நாம் குறைந்த அளவே தற்போது நடக்கிறோம்.
உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதை வாழ்க்கையின் தாரக மந்திரமாக கொள்ள வேண்டும்.இந்த இயக்கத்தை இன்றைய தினத்தில் துவங்குவதுதான் சிறந்தது.ஃபிட் இந்தியா இயக்கத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்று பேசினார்.