ரன்தீப் குலேரியாவிற்கு நன்றி ! கொரோனாவில் இருந்து மீண்ட ஜெ.பி.நட்டா

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார்.
கடந்த மாதம் 13-ஆம் தேதி பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.ஆகவே கொரோனா அறிகுறிகள் இருந்த நிலையில் ,மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் கொரோனா வழிக்காட்டுதல்களை பின்பற்றி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார் நட்டா.மேலும் தனது உடல்நிலை நன்றாக உள்ளது என்றும் கடந்த சில நாட்களில் என்னை சந்தித்தவர்கள் ,தயவு செய்து தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார்.இது தொடர்பாக நட்டா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் ,கொரோனாவின் போது பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி.நானும் எனது குடும்ப உறுப்பினர்களும் இப்போது கொரோனாவிலிருந்து முழுமையாக மீண்டுள்ளோம். இந்த சவாலான காலங்களில் அர்ப்பணிப்பு மற்றும் தொடர்ச்சியாக ஆதரவு கொடுத்த எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா மற்றும் அவரது குழுவினருக்கு நாங்கள் முழு மனதுடன் நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
I thank everyone for their wishes, prayers and moral support during my illness. My family members and I have now fully recovered from COVID-19. We whole heartedly thank Dr Randeep Guleria,Dir AIIMS and his team for their dedication & continued support in these challenging times. pic.twitter.com/RPW88DEq5n
— Jagat Prakash Nadda (@JPNadda) January 1, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
சீக்கியர் கொலை வழக்கு : சஜ்ஜன் குமாருக்கு மீண்டும் ஆயுள் தண்டனை வழங்கிய டெல்லி நீதிமன்றம்!
February 25, 2025
AUSvSA : ‘குறுக்கே வந்த கவுசிக் மழை’… போட்டியை ரத்து செய்தது ஐசிசி!
February 25, 2025
மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், விஜய் சேதுபதி, விஜயின் மகன்.., களைகட்டும் ஜி.கே.மணி இல்ல திருமண விழா!
February 25, 2025
“விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு எனது கட்சியில்..,” சீமான் ‘சாஃப்ட்’ பதில்!
February 25, 2025