சட்டப்பேரவை தேர்தலில் மாபெரும் வெற்றியை வழங்கிய டெல்லி மக்களுக்கு முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார். டெல்லிக்கே கிடைத்த வெற்றி இது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் நல்ல கல்வியை விரும்பும் மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் புதுமையான அரசியலுக்கு இந்த வெற்றி வழி வகுத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகளுக்கான கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் 22 வாக்கு மையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் இறுதிக்கட்டத்தை நோக்கி நடைபெற்று வருகிறது. இதில் 70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப் பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்க 36 இடங்கள் போதும் என்ற நிலையில், தற்போது நிலவரப்படி 70 தொகுதிகளில் 63 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்று 3-வது முறையாக ஆட்சியமைக்க உள்ளது.
இதில் பாஜக 7 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் மற்ற காட்சிகள் இதுவரை ஒரு தொகுதியிலும் கூட முன்னிலை பெறவில்லை என்பது குறிப்பிடப்படுகிறது. மேலும் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களை தேர்தல் ஆணையம் அறிவித்து வருகிறது. அந்த வகையில் டெல்லி பட்பர்கஞ்ச் தொகுதியில் அம்மாநில துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா வெற்றி பெற்றுள்ளார். ஆம் ஆத்மியின் வெற்றியை டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதில் 3-வது முறையாக முதலமைச்சராகும் அரவிந்த் கெஜ்ரிவால் தொண்டர்கள் இடையே உரையாற்றி நன்றி தெரிவித்தார்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…