2028-29 காலத்திற்கான இந்திய வேட்புமனுவிற்கு கென்யா அளித்த ஆதரவுக்கு நன்றி.! அமைச்சர் ராஜ்நாத் சிங்
கென்யாவின் பாதுகாப்புக்கான அமைச்சரவை செயலாளர் ஏடன் பேரே டுவால் உடனான இருதரப்பு சந்திப்பின் போது, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.
அப்போது, “வர்த்தகம், பொருளாதாரம், கல்வி, மற்றும் மக்களிடையேயான தொடர்புகளில் எங்களின் ஒத்துழைப்பு வலுப்பெற்றுள்ளது.”
“2021-22ல் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினர்களாக நமது இரு நாடுகளும் நெருக்கமாக செயல்படுகின்றன. 2028-29 காலத்திற்கான இந்திய வேட்புமனுவுக்கு கென்யா அளித்த ஆதரவுக்கு நன்றி கூறுகிறோம்.” என்று ராஜ்நாத் சிங் கூறினார்.