மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணிக்கு என்னை போட்டியிட பணித்ததற்கு நன்றி – யஷ்வந்த் சின்ஹா
முக்கியத்துவம் வாய்ந்த பணிக்கு என்னை போட்டியிட பணித்ததற்கு நன்றி என யஷ்வந்த் சின்ஹா பேட்டி.
நாட்டின் குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.இதனால், குடியரசுத் தலைவர் தேர்தல் வருகின்ற ஜூலை 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதன் முடிவுகள் ஜூலை 21-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
டெல்லியில் என்சிபி தலைவர் சரத் பவார் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா நிறுத்த ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.இதனால்,குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக,திரிணாமுல் காங்கிரஸ் துணைத் தலைவர் பதவியில் இருந்து யஷ்வந்த் சின்கா ராஜினாமா செய்திருந்தார்.
இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த யஷ்வந்த் சின்ஹா, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணிக்கு என்னை போட்டியிட பணித்ததற்கு நன்றி. முக்கியத்துவம் வாய்ந்த இந்த பணியை கையாள்வதில் மெத்தனம் கூடாது என தெரிவித்துள்ளார்.