AI மூலம் சித்தரித்த சிவபெருமானின் தாண்டவம்..! வைரலாகும் வீடியோ..!

Shiva Tandava

உலக அளவில் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு என்ற ஏஐ (AI) தொழில்நுட்பம் மருத்துவம், கல்வி, விவசாயம் மற்றும் ஐடி என பல துறையில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஏஐ கலைஞர்களுக்கு படைப்பாற்றலின் முற்றிலும் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஏஐ மூலம் கலைஞர்கள் அவர்கள் விரும்பும் எந்த கலைப்படைப்பையும் உருவாக்க முடியும். அதை அவர்கள் குறைந்த நேரத்தில் செய்ய முடியும். அதன்படி, சிவபெருமான் தாண்டவம் ஆடுவதைச் சித்தரிக்கும் ஒரு அசாதாரண வீடியோவை உருவாக்க ஒரு கலைஞர் ஏஐ-யைப் பயன்படுத்தியுள்ளார்.

ஏஐ-யைப் பயன்படுத்தி பிரபல பாரம்பரிய நடனக் கலைஞர் துருபோ சர்க்கார் சிவபெருமானின் தாண்டவத்தை உருவாக்கியுள்ளார். அவர் உருவாக்கிய அந்த வீடியோ அனைவரையும் வியக்கவைக்கும் வகையில் இருப்பதோடு, இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் நடனக் கலைஞர் நடனம் ஆடுகிறார். அப்பொழுது, ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்ட சிவனின் உடல், கலைஞரின் உடலோடு ஒத்துபோய், சிவனே உண்மையில் ஆடுவது போன்று உள்ளது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் “அண்ணா இது வேற லெவல், வாவோ மிக்க நன்றி” என்று கலைஞரை வாழ்த்தி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Psycadelic Art (@wild.trance)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்