பிரதமர் மோடியை சந்தித்த தம்பிதுரை…!
பிரதமர் நரேந்திர மோடியை, அதிமுக நாடாளுமன்ற குழு தலைவர் தம்பிதுரை சந்தித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று 2023-24 க்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்துள்ள நிலையில், மத்திய பட்ஜெட் 7 முக்கிய அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடியை, அதிமுக நாடாளுமன்ற குழு தலைவர் தம்பிதுரை அவர்கள் சந்தித்துள்ளார். சிறப்பான பட்ஜெட்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக தம்பிதுரை, பிரதமர் மோடியை சந்தித்ததாக கூறப்படுகிறது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அதிமுக நாடாளுமன்ற குழு தலைவர் தம்பிதுரை, பிரதமர் மோடியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.