தாக்தே சூறாவளி : கேரளாவில் சில மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட்…! நிவாரண முகாம்கள் திறப்பு…!
கேரளாவில் பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், நிவாரண முகாம்கள் திறப்பு.
அரபிக்கடலில் தாக்தே சூறாவளி உருவாக வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, கேரளாவில் சில மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் பதனம்திட்டா மாவட்டங்களில் இன்று சிவப்பு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அதே நாளில் மத்திய கேரளாவில் எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா மற்றும் இடுக்கி ஆகிய இடங்களில் கனமழை மற்றும் அதிக கனமழை பெய்யும் என்பதை குறிக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு கேரளாவில் மலப்புரம் கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு மற்றும் காசர்கோடு ஆகிய இடங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து திருவனந்தபுரத்தில் பலத்த மழை பெய்யும் என்பதால் திருவனந்தபுரம் கலெக்டர் நவ்ஜோத் கோஷா மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்படும் என்று அறிவித்திருந்தார். வெள்ளிக்கிழமை தடுப்பூசி போடுவதற்காக முன்பதிவு செய்தவர்கள் அதற்கு அடுத்த நாள் தடுப்பூசி பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா தடுப்பு நெறிமுறைகளுடன் கடலோர மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்காக, வெள்ள நிவாரண முகாம்களை திறக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.