குழந்தைக்காக விமானம் மூலம் கொண்டு வரப்படும் தாய்ப்பால்.
பெற்றோர்களை பொறுத்தவரையில், தனது குழந்தைக்காக எதை வேண்டுமானாலும் செய்யக் கூடிய தியாக மனதுடையவர்கள். லே- அறுவைசிகிச்சை மூலம் பிறந்த பச்சிளம் குழந்தையானது, பிறந்த அடுத்த நாளே அறுவை சிகிச்சைக்காக, டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
காரணம் என்னவென்றால், குழந்தையின் சுவாசக்குழாயும், உணவுக் குழாயும் ஒன்றோடொன்று இணைந்திருந்த நிலையில், உடனடியாக குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. குழந்தை டெல்லியில் உள்ள மருத்துவமனையில் இருந்து சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், லே-வில் உள்ள தனது தாயின் தாய்ப்பாலையே குழந்தை அருந்துகிறது.
தினசரி காலையில் குழந்தையின் தந்தை Jikmet Wangdus டெல்லி விமான நிலையத்தில் காத்திருப்பார். லேவிலிருந்து விமானப் பணியாளர்களின் உதவியுடன் Jikmet Wangdus-இன் நண்பர், தாய்ப்பாலை டெல்லிக்கு அனுப்பி வைப்பார். சரியாக ஒரு மணி நேரத்தில் டெல்லிக்கு வந்து சேரும் தாய்ப்பாலை வாங்கிக் கொண்டு குழந்தையின் தந்தை மருத்துவமனைக்கு விரைந்து செல்வார்.
குழந்தையின் தாய்க்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், அவர் அங்கிருந்து டெல்லிக்கு செல்வது சற்று சிக்கலான நிலை என்பதால், தனது குழந்தைக்காக 6 மணி நேரம் செலவழித்து, பாலை பீய்ச்சி எடுத்து, டெல்லிக்கு அனுப்பி வைக்கிறார்.
இதுகுறித்து மேக்ஸ் மருத்துவமனையின் மருத்துவர் பூனம் சிதானா அவர்கள் கூறுகையில், குழந்தைக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. ஆனால் அறுவைசிகிச்சை செய்து பலவீனமாக இருக்கும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது அவசியம் என்ற நிலையில், தாய்ப்பாலை குழந்தைக்காக கொண்டுவருவது தான் தங்கள் முன் இருந்த மாபெரும் சவால் என தெரிவித்துள்ளார்.
சென்னை : சில தினங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில்…
விழுப்புரம் : விழுப்புரத்தில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அங்கீகார வெற்றி விழாவில் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்…
சென்னை : கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) அன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அன்றைய தினமே…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. சட்டப்பேரவை கூடியதும் மறைந்த எம்எல்ஏக்கள் மற்றும் டாக்டர்…
சத்தீஸ்கர் : நடந்து முடிந்த சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர், ஓய்வு பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்களை மீண்டும்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க விஞ்ஞானி லெக்ஸ் பிரிட்மெனின் பாட்காஸ்டர் லெக்ஸ் ஃப்ரிட்மேனுடனான நேர்காணலில், "இந்தியாவா? பாகிஸ்தானா?…