தாய் வேறு இடம்! குழந்தை வேறு இடம்! விமானம் மூலம் கொண்டுவரப்படும் தாய்ப்பால்! காரணம் என்ன?

Default Image

குழந்தைக்காக விமானம் மூலம் கொண்டு வரப்படும் தாய்ப்பால்.

பெற்றோர்களை பொறுத்தவரையில், தனது குழந்தைக்காக எதை வேண்டுமானாலும் செய்யக் கூடிய தியாக மனதுடையவர்கள். லே- அறுவைசிகிச்சை மூலம் பிறந்த பச்சிளம் குழந்தையானது, பிறந்த அடுத்த நாளே அறுவை சிகிச்சைக்காக, டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

காரணம் என்னவென்றால், குழந்தையின் சுவாசக்குழாயும், உணவுக் குழாயும் ஒன்றோடொன்று இணைந்திருந்த நிலையில், உடனடியாக குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. குழந்தை டெல்லியில் உள்ள மருத்துவமனையில் இருந்து சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், லே-வில் உள்ள தனது தாயின் தாய்ப்பாலையே குழந்தை அருந்துகிறது.

தினசரி காலையில் குழந்தையின் தந்தை Jikmet Wangdus டெல்லி விமான நிலையத்தில் காத்திருப்பார். லேவிலிருந்து விமானப் பணியாளர்களின் உதவியுடன் Jikmet Wangdus-இன் நண்பர், தாய்ப்பாலை டெல்லிக்கு அனுப்பி வைப்பார். சரியாக ஒரு மணி நேரத்தில் டெல்லிக்கு வந்து சேரும் தாய்ப்பாலை வாங்கிக் கொண்டு குழந்தையின் தந்தை மருத்துவமனைக்கு விரைந்து செல்வார்.

குழந்தையின் தாய்க்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், அவர் அங்கிருந்து டெல்லிக்கு செல்வது சற்று சிக்கலான நிலை என்பதால், தனது குழந்தைக்காக 6 மணி நேரம் செலவழித்து, பாலை பீய்ச்சி எடுத்து, டெல்லிக்கு அனுப்பி வைக்கிறார்.

இதுகுறித்து மேக்ஸ்  மருத்துவமனையின் மருத்துவர் பூனம் சிதானா அவர்கள் கூறுகையில், குழந்தைக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. ஆனால் அறுவைசிகிச்சை செய்து பலவீனமாக இருக்கும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது அவசியம் என்ற நிலையில், தாய்ப்பாலை குழந்தைக்காக கொண்டுவருவது தான் தங்கள் முன் இருந்த மாபெரும் சவால் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்