பப்ஜி விளையாட தாய் தடை ! தற்கொலை செய்து கொண்ட 17-வயது சிறுவன் !

Default Image

சமீபகாலமாக பெரியவர்கள் முதல் சிறியவர்கள்  வரை அனைவரையும் கட்டி போட்டு கொண்டு இருப்பது என்றால் அது பப்ஜி விளையாட்டுதான் இந்த விளையாட்டுக்கு பலர் அடிமையாகி உள்ளனர்.

இந்த விளையாட்டை விளையாடும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் பலர் மனதளவில் பாதிக்கப்பட்டு உள்ளதாக பலர் குற்றச்சாற்றையை எழுப்பினர்.இதனால் நேபாளம் ,ஈரான் போன்ற நாடுகளில் பப்ஜி விளையாட்டு தடைசெய்யப்பட்டு உள்ளது.

Image result for பப்ஜி

பப்ஜி விளையாட்டை இந்தியாவிலும் தடைசெய்ய கோரி பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜீ ண்ட் பகுதியை சார்ந்த 17 – வயது சிறுவன் தனது செல்போனில் தொடர்ந்து பப்ஜி விளையாட்டை விளையாடி வந்து உள்ளார்.

இதனால் அந்த சிறுவன் படிப்பில் அதிக கவனம் செலுத்தாமல் பப்ஜி விளையாடி கொண்டு இருந்ததால் அவரது தாய் செல்போனை பிடுங்கி வைத்து கொண்டு இனிமேல் பப்ஜி விளையாட்டை விளையாட கூடாது என கண்டித்து உள்ளார்.

Image result for பப்ஜி

தாய் விளையாட கூடாது என கண்டித்ததால் மனமுடைந்த அந்த சிறுவன் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.மேலும் இந்த சிறுவனின் தந்தை போலீஸ் அதிகாரி  என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்