விஞ்ஞானிகளின் இடைவிடாத கடின உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் இது ஒரு சான்றாகும் – பிரதமர் மோடி..!

கடந்த செப்டம்பர் 2-ம் தேதி சூரியனை ஆய்வு செய்வதற்கான இஸ்ரோவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை பி.எஸ்.எல்.வி சி-57 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலத்தை பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன் (Lagrangian Point One) எனும் எல்-1 புள்ளிக்கு மிக அருகே நிலைநிறுத்த முடிவு செய்யப்பட்டது.

மற்றொரு மைல்கல்லை எட்டிய இந்தியா! எல்-1 புள்ளியை அடைந்த ஆதித்யா விண்கலம்!

அதன்படி, 127 நாள்களுக்கு பிறகு சற்று நேரத்திற்கு முன் ஆதித்யா எல்1 பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள எல்1 புள்ளிக்கு அருகே வெற்றிகரமாக அடைந்துள்ளது என இஸ்ரோ அறிவித்திருந்தது. இந்நிலையில், பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளமான எக்ஸ் பதிவில் “எல்1 புள்ளியை ஆதித்யா விண்கலம் வெற்றிகரமாக சென்று அடைந்து மற்றொரு மைல்கல்லை எட்டி உள்ளது.

விஞ்ஞானிகளின் இடைவிடாத கடின உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் இது ஒரு சான்றாகும். அசாதாரணமான சாதனையை நாட்டு மக்களுடன் இணைந்து நானும் பாராட்டுகிறேன். மனித குலத்தின் நலனுக்காக அறிவியலின் புதிய எல்லைகளைத் தொடர்ந்து தொடர்வோம்” என  பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்