டெஸ்லா போட்டியாளரான ட்ரைடன் (ஈ.வி) தெலுங்கானாவில் ரூ.2,100 கோடி முதலீடு செய்வதால் 25,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என அமைச்சர் கே.டி.ராமராவ் தெரிவித்துள்ளார்.
எலோன் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிறுவனத்தின் முக்கிய போட்டியாளரான அமெரிக்காவைச் சேர்ந்த மின்சார வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான ட்ரைடன் (ஈ.வி) ,தெலுங்கானா மாநிலத்தின் சங்கரெட்டி மாவட்டத்தில் 1,100 கோடி ரூபாய் முதலீட்டில் தனது உற்பத்தி ஆலையை நிறுவ மாநில அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இது தொடர்பாக,தெலுங்கானா தகவல் தொழில்நுட்ப மற்றும் தொழில்துறை அமைச்சர் கே.டி.ராமராவ் கூறியதாவது,”இந்த முதலீடு சுமார் 25,000 உள்ளூர் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும். ட்ரைடன் (ஈ.வி) முதல் ஐந்து ஆண்டுகளில் அரை டிரக்குகள், செடான், சொகுசு எஸ்யூவி மற்றும் ரிக்ஷாக்கள் உட்பட 50,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை உற்பத்தி செய்யும்” என்று தெரிவித்தார்.
இதனையடுத்து,தங்கள் மாநிலத்தில் முதலீடு செய்வதற்கான முடிவுக்கு நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்த கே.டி.ஆர்,”தெலுங்கானா மாநிலம் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தித் துறைக்கு மிகவும் பிடித்த இடமாக வளர்ந்து வருகிறது.இதனால்,இத்தகைய மெகா திட்டங்களுக்கு பொருந்தக்கூடிய அனைத்து சலுகைகளையும் அரசாங்கம் வழங்கும்.”, என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து,இந்த திட்டத்திற்கு தேவையான நிலமானது தெலுங்கானா மாநில தொழில்துறை உள்கட்டமைப்பு கழகம் (டி.எஸ்.ஐ.சி) மூலம் நிறுவனத்திற்கு வழங்கப்படும்.ட்ரைடன் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்களை இந்திய சந்தைக்கு மட்டுமல்லாமல், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம் மற்றும் மத்திய கிழக்கு உள்ளிட்ட நாடுகளுக்கும் வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி…