J&K சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு.! ஒருவர் உயிரிழப்பு.., 10 பேர் படுகாயம்.!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த ஒருவர் உயிரிழந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதல் பிற்பகல் 2:30 மணியளவில் பைசரனில் நடந்தது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரில் பொதுவாக சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தரும் இடத்தில், இந்த கொடூர தாக்குதல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பொது பஹல்காமில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. மேலும்,இந்த சம்பவத்திற்கு காரணமான பயங்கரவாதிகளை கண்டுபிடிப்பதற்காக தற்போது ஒரு பெரிய தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது. பயங்கரவாதிகள் தப்பிச் செல்வதைத் தடுக்க அனைத்து வெளியேறும் இடங்களிலும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.