காஷ்மீரில் துப்பாக்கி தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்..!
காஷ்மீரில் பாதுகாப்புப்படை வீரர்கள் மீது துப்பாக்கி தாக்குதலில் தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளனர்.
காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் தற்போது அதிகரித்து வரும்நிலையில் அதனை தடுக்கும் விதமாக பாதுகாப்பு படை வீரர்களும், காவல்துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தீவிரவாதிகளை கண்காணித்து அவர்களை கண்டால் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இது போன்ற தாக்குதலில் சில தீவிரவாதிகள் கொல்லப்பட்டும் வருகின்றனர். இந்த சமயத்தில் நேற்று காலை பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள குரேஸ் என்ற இடத்தில் தீவிரவாதிகள் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்துள்ளனர். அதனை பாதுகாப்பு படை வீரர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காஷ்மீரில் உள்ள குல்கம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அங்கிருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பில் இருந்த வீரர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.