ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்! சிபிஆர்எஃப் வீரர் இருவர் பலி!
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு சிபிஆர்எஃப் வீரர், ஒரு கிராமவாசி உயிரிழந்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சோபாரில் சிபிஆர்எஃப் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அங்கு வந்த பயங்கரவாதிகள், வீரர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் 4 சிபிஆர்எஃப் வீரர்கள் உட்பட, கிராமவாசி ஒருவர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து, 5 பேரையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 1 சிபிஆர்எஃப் வீரர் மற்றும் ஒரு கிராமவாசி இருவரும் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, டிஜிபி தில்பாக் சிங், சிபிஆர்எஃப் வீரர்கள் மீதான தாக்குதலை உறுதி செய்துள்ள நிலையில், தாக்குதல் நாடைபெற்ற பகுதி சீலிடப்பட்டு, பயங்கரவாதிகளை தேடும் பணி .தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.