சிஆர்பிஎப் வீரர்,6 வயது சிறுவனை கொன்ற பயங்கரவாதி சுட்டுக்கொலை
சிஆர்பிஎப் வீரர்,6 வயது சிறுவனை கொன்ற பயங்கரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பிஜ்பெஹாரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள்,சிஆர்பிஎப் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.இந்த தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர் மற்றும் 6 வயது சிறுவன் உயிரிழந்தான். இந்த தாக்குதலில் தொடர்புடைய இருவரை வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.ஆனால் உயிரிழப்பு சம்பவத்தில் தொடர்புடைய ஜாகீத் தாஸ் என்பவனை தேடும் பணியில் வீரர்கள் தீவிரமாக நடைபெற்றது.
இந்நிலையில் இந்த தாக்குதலில் தொடர்புடைய ஜாகீத் தாஸ் என்பவனை சுட்டு கொன்றுள்ளதாக காஷ்மீர் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். நேற்று ஸ்ரீநகரில் நடைபெற்ற தேடுதல் வேட்டையின்போது ஜாகீத் தாஸ் என்பவனை சுட்டு கொன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
#Killer of JKP & CRPF personnel at #Bijbehara #Anantnag and one 6 years old boy, #terrorist Zahid Daas killed in yesterday’s #encounter at #Srinagar. Big success for JKP & CRPF: IGP Kashmir @JmuKmrPolice https://t.co/1T4U1lOzdD
— Kashmir Zone Police (@KashmirPolice) July 3, 2020