உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் டி.எஸ்.பி., 3 எஸ்.ஐ.,க்கள் ,8 போலீசார் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளிய கான்பூர் என்கவுன்டர் வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ரவுடி கும்பலுடன் தொடர்புடைய, மேலும் 3 போலீசார் அதிரடியாக, ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே, கொலை, கொள்ளை ஆகியட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி விகாஷ் துபே ரவுடியை பிடிக்கச் சென்ற போலீசார் மீது ரவுடி கும்பல் ஆனது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது.
இந்த துப்பாக்கி சூட்டில் ஒரு டி.எஸ்.பி., 3 எஸ்.ஐ.,க்கள் உட்பட, 8 போலீசார் பரிதாபமாக இறந்தனர். மேலும் 7 போலீசார் படுகாயம் அடைந்தனர்.இந்நிகழ்வு அம்மாநிலத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வரும் நிலையில் தலைமறைவாக உள்ள ரவுடி விகாஷ் துபேயை பிடிக்க, போலீசார் தேடுதல் வேட்டையை துவக்கி உள்ளனர். இதில் தற்போது துபேயின் கூட்டாளிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
என்கவுன்டர் நடந்த இடத்துக்கு அருகாமையுள்ள உள்ள சவுபேபூர் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள சில போலீசாருக்கும், ரவுடி கும்பலுக்கும் தொடர்பு இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தலைமறைவாகியுள்ள ரவுடி துபேயை பிடிப்பதற்காக போலீசார் 1 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையாக அறிவித்தனர்.ஆனால் அவ்வாறு ரவுடி குறித்து வரும் தகவலை, சவுபேபூர் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் சிலர், முன் கூட்டியே ரவுடி கும்பலுக்கு கசியவிட்டது அம்பலமாகியது.
இதன் அடிப்படையில் காவல் நிலைய பொறுப்பு அதிகாரி, சமீபத்தில் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இந்நிலையில் ஒரு எஸ்.ஐ., உள்ளிட்ட, மேலும் 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள ரவுடி விகாஷ் துபேயை பற்றி தகவல் தெரிவிப்போருக்கு, 1 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த பரிசு தொகை, 2.50 லட்சம் ரூபாயாக அதிகரித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…
ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…