காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சண்டையில் தீவிரவாதி சுட்டுக்கொலை..!
காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சண்டையில் தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
காஷ்மீரில் உள்ள பந்திப்போரா மாவட்டத்தில் சந்தாஜி பகுதியில் தீவிரவாதிகள் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் காரணத்தால் எல்லைப்பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தெரிவித்துள்ள காவல்துறையினர், சோதனையில் ஈடுபட்டபோது அங்கிருந்த பழைய கட்டிடம் ஒன்றில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி சண்டை நடத்தியுள்ளனர்.
இதில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேலும் இறந்த தீவிரவாதியை பற்றிய எந்த தகவலும் இல்லை. இதனையடுத்து தீவிரவாதி வைத்திருந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.