காஷ்மீரில் பாதுகாப்புப்படை வீரர்கள் மீது துப்பாக்கி தாக்குதலில் தீவிரவாதிகள் ஈடுபட்டதில், பாதுகாப்பு படை வீரர்களால் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டுள்ளார்.
காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் தற்போது அதிகரித்து வரும்நிலையில் அதனை தடுக்கும் விதமாக பாதுகாப்பு படை வீரர்களும், காவல்துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தீவிரவாதிகளை கண்காணித்து அவர்களை கண்டால் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இது போன்ற தாக்குதலில் சில தீவிரவாதிகள் கொல்லப்பட்டும் வருகின்றனர். இந்த சமயத்தில் நேற்று முன்தினம் காலை பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள குரேஸ் என்ற இடத்தில் தீவிரவாதிகள் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்துள்ளனர். அதனை பாதுகாப்பு படை வீரர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து நேற்று காஷ்மீரில் உள்ள குல்கம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அங்கிருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பில் இருந்த வீரர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்து தெரிவித்த காஷ்மீர் மாநில காவல்துறை தலைவர் விஜயகுமார், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர்கள் யாருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லை.
இதனை அடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் தீவிரவாதிகளை தேடி கண்டுபிடித்து பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும், பாதுகாப்புப்படை வீரர்கள் மற்றும் மக்களில் இருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது.
மேலும் இறந்த தீவிரவாதி லக்சர்-இ-தொய்யா அமைப்பை சேர்ந்தவர் என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல் தீவிரவாதிகளிடமிருந்து பறிமுதல் செய்த ஆயுதங்களை பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…