தீவிரவாதி முகமது ஆரிப்-க்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை உறுதி – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
டெல்லி செங்கோட்டை தாக்குதல் விவகாரத்தில், முகமது அரிப்-க்கு தூக்குத்தண்டனை உறுதி.
கடந்த 2000-ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி டெல்லி செங்கோட்டையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தில் ராணுவ வீரர்கள் இரண்டு பேர் வீர மரணம் அடைந்தனர்.
இந்த நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதி முகமது ஆரிப் கைது செய்யப்பட்டார். இவருக்கு இந்த வழக்கில் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் இந்த தண்டனையை உறுதி செய்தது.
இதனை அடுத்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் தனக்கு விதிக்கப்பட்ட தூக்க தண்டனை எதிர்த்து முகமது அரிப் சீராய்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவானது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்ததையடுத்து, முகமது அரிப் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இதனையடுத்து, முகமது அரிப்க்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.