- பிரபல வெடிகுண்டு குற்றவாளி டாக்டர் ஜலீஸ் அன்சாரி திடீர் மாயம்.
- வேறு ஏதேனும் சதிச்செயலுக்காக தப்பி ஓட்டமா? காவல்துறை தேடுதல் வேட்டை.
கடந்த 1993ம் ஆண்டு ராஜ்தானி எக்ஸ்பிரசில் வெடிகுண்டு வைத்தத வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் டாக்டர் ஜலீஸ் அன்சாரி. இவர் ‘டாக்டர் வெடிகுண்டு’ என்று பின்னாளில் அச்சத்தோடு அழைக்கப்பட்டார். இவருக்கு இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுளது. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் இவருக்கு 21 நாள் பரோல் வழங்கி இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இவருக்கு பரோல் முடிவடைந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை மராட்டிய மாநில பயங்கரவாத தடுப்புப் படை (ஏ.டி.எஸ்), குற்றப்பிரிவு மற்றும் மும்பை காவல்துறையினர் அவரைத் தேடி மும்பை சென்ட்ரலில் உள்ள மோமின்புரா வீட்டுக்கு சென்றனர்.
ஆனால் அவர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், திரும்பி வரவில்லை என்றும் அவரது குடும்பத்தினர் காவல்துறையினரிடம் தெரிவித்தனர். அவர்கள், அன்சாரி வியாழக்கிழமை அதிகாலை தொழுகைக்காக சென்றார். ஆனால் அவர் திரும்பி வர வில்லை. இதை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் காவல்துறையினரிடம் புகார் அளித்து உள்ளனர். இதில், டாக்டர் அன்சாரி கடந்த 1994-ம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வருகிறார், அவர் ராஜ்தானி எக்ஸ்பிரசில் வெடிகுண்டு வைத்ததில் பங்கு வகித்ததற்காக கைது செய்யப்பட்டார். எனினும் இவர் இந்தியா முழுவதும் 50க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்புகளில் பங்கு வகித்ததாகவும் கூறப்படுகிறது.
இவர், ராஜஸ்தானில் உள்ள ஆறு இடங்களில் 1993 டிசம்பர் 5 மற்றும் 6 தேதிகளில் ரெயில்களில் குண்டுவெடிப்பு நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பின்னர் அஜ்மீர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயுள் தண்டனை கைதி அதிலும் குண்டு வெடிப்பு தீவிரவாதியான இவரை விரைந்து கைது செய்து வேறு ஏதேனும் அசம்பாவிதம் நடக்காமல் காவல்துறை செயல்பட வேண்டும் என பொதுமக்கள் கருதுகின்றனர்.