காஷ்மீரில் கடந்த வெள்ளிக்கிழமை 4 பயங்கரவாதிகள் பேருந்து மூலம் ஜம்முவிற்கு வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, நஹ்ரோடா மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாகன சோதனைச்சாவடியில் பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பரிசோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, பேருந்தில் இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை பார்த்ததும் தப்பித்து அருகில் இருந்த காட்டுப்பகுதியில் தப்பி சென்று துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது, பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
உயிரிழந்த 4 பேரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் என்பதும், ஜம்முவில் சதித் திட்டத்தை நிறைவேற்றும் நோக்கத்துடன் வந்ததும் தெரியவந்தது. தீவிரவாதிகள் எப்படி இந்தியாவிற்குள் ஊடுருவினார்கள் என்பது குறித்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்போது துப்பாக்கிச்சண்டை நடந்த அருகில் உள்ள இந்திய- பாகிஸ்தான் சர்வதேச எல்லை ஒட்டிய சம்பா பகுதியில் சுரங்கப்பாதை இருப்பது பாதுகாப்பு படையினரும், போலீசாரும் கண்டுபிடித்தனர்.
இந்தியப் பகுதியில் 160 மீட்டரும், பாகிஸ்தானில் 40 மீட்டர் தூரத்திற்கு, 25 மீட்டர் ஆழத்தில் சுரங்கப்பாதை தோண்டப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுரங்கப்பாதையின் மறுபகுதி பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படை அமைந்திருக்கும் இடத்திற்கு செல்வதை அதிகாரிகள் கண்டறிந்தனர், தீவிரவாதிகள் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் உதவி செய்துள்ளதாகவும், தீவிரவாதிகளுடன் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் பாகிஸ்தான் ராணுவத்தின் முத்திரை இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொழும்பு : சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்திற்காக நடந்த தேர்தலிலும் அதிபர் அநுர குமரா திசநாயக…
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…
சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…