ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் டிசம்பர் 21 அன்று பூஞ்ச் பகுதியில் இரண்டு பயங்கரவாதிகள் ராணுவ வாகனங்கள் மீது வெடிகுண்டுகளை வீசினர். இந்த நடந்த தாக்குதலில் 4 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் மூன்று பேர் காயமடைந்தனர். ரஜோரி-பூஞ்ச் காடுகளில் இந்த பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து, அன்றைய தினம் முதல், ரஜோரி மற்றும் பூஞ்ச் ஆகிய பகுதிகளில் பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாதிகளை தேடும் ராணுவம் மற்றும் காவல்துறையினரின் தேடுதல் பணி இன்று மூன்றாவது நாளாக தொடர்கிறது. வியாழக்கிழமை மாலை முதல் ஆளில்லா விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் மொபைல் மற்றும் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனம் மீது நடந்த தாக்குதலில் 4 வீரர்கள் வீரமரணம் அடைந்த நிலையில் இந்தத் தாக்குதல் மீண்டும் புல்வாமா தாக்குதல் சம்பவமா என மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி உள்ளனர். பூஞ்ச் பயங்கரவாத தாக்குதலுக்கு மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி (PAFF) பொறுப்பேற்றுள்ளது.
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…
கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…
சான் பிரான்சிஸ்கோ : பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் இருந்து…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா - பெசாவருக்கு ஜாபர் விரைவு ரயில் 450 பேருடன் சென்றது.…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…