பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் – 2 சிஆர்பிஎப், ஒரு சிறப்பு போலீஸ் படை அதிகாரி வீரமரணம்.!
ஜம்மு காஷ்மீரில் திடீரென பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிசூடு நடத்தியதில் 3 பேர் வீரமரணம்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டம் க்ரீரி பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் சிறப்பு போலீஸ் படை அடங்கிய கூட்டு பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, திடீரென அங்கு வந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிவிட்டனர்.
இந்த சம்பவத்தில் 2 சிஆர்பிஎப் வீரர்கள், உள்ளிட்ட 3 பேரும் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு செல்லப்பட்டு உயிரிழந்தனர். இந்த துப்பாக்கி சூட்டை எந்த அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர் என்பது தெரியவில்லை. இதனால் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.