காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதி தப்பியோட்டம் !
பாகிஸ்தான் தீவிரவாதியை போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தீவிரவாதிகள் மீட்டுச் சென்றனர்.
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட, பாகிஸ்தான் தீவிரவாதியை போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தீவிரவாதிகள் மீட்டுச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீநகர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் தீவிரவாதியான அபு அன்சுல்லாவை வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக போலீசார் ஸ்ரீநகரில் உள்ள மகாராஜா ஹரிசிங் மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.
அப்போது அங்கு வந்த தீவிரவாதிகள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். தீவிரவாதி அன்சுல்லாவும் போலீசாரிடம் இருந்து துப்பாக்கியை பறித்து தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ஒரு காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு காவலர் படுகாயம் அடைந்தார். இந்தச் சண்டையில் அன்சுல்லாவை தப்பச் செய்து தீவிரவாதிகள் மீட்டுச் சென்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.