பிரேசில்,ரஷ்யா,இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் பங்குபெறும் பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் , உலக நாடுகள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினை தீவிரவாதம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகளாக பிரேசில்,ரஷ்யா,இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் உள்ளது.உறுப்பு நாடுகளான பிரேசில்,ரஷ்யா,இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் நடப்பாண்டிற்கான 12-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று தொடங்கியுள்ளது .காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்த மாநாடு, ரஷ்யா தலைமையில் நடைபெற்று வருகிறது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பை ஏற்றுக்கொண்டு பிரதமர் மோடி இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளார்.மேலும் இந்த மாநாட்டில்,தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா ,பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ( Jair Bolsonaro),சீன அதிபர் ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில்,உலகம் தற்போது எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையாக தீவிரவாதம் உள்ளது.தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும். முறையான திட்டங்களை இதற்காக பிரிக்ஸ் அமைப்பு வகுக்க வேண்டும்.ரஷ்யா தீவிரவாதத்திற்கு எதிராக சிறப்பாக செயல்பட்டுள்ளது. ரஷ்யாவின் தலைமையில் பிரிக்ஸ் சிறப்பாக இயங்கி வருகிறது. இந்தியாவும் ரஷ்யாவை போலவே பிரிக்ஸ் கூட்டமைப்பை வழி நடத்தும்.
கொரோனாவிற்கு பின் பொருளாதார ரீதியாக பிரிக்ஸ் நாடுகள் உலக அளவில் முன்னிலை வகிக்கும்.இந்தியாதான் உலகம் முழுக்க அதிக மருந்துகளை ஏற்றுமதி செய்கிறது.நாடுகளுக்கு இடையிலான நட்பு பிரிக்ஸ் மாநாடு மூலம் வலிமையான நிலையை அடைந்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் பேசியுள்ளார்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…