ஹரியானாவில் பயங்கரம்..! இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.. 3 பேர் உயிரிழப்பு..!
ஹரியானாவின் ரேவாரி பகுதியில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 7 பேர் காயமடைந்தனர்.
ஹரியானாவில் ரேவாரி பகுதியில் இரண்டு சொகுசு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணித்த 3 பேர் உயிரிழந்தனர். மேலும் மூன்று குழந்தைகள் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இந்த விபத்தில் சிக்கி காயமடைந்த 7 பேரையும் மீட்டு ரேவாரி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இறந்தவர்களின் உடல்கள் பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து காயமடைந்தவர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ரேவாரியில் உள்ள குஜார்வாஸ் கிராமத்தில் திருமண விழாவிற்குச் சென்றுவிட்டு காரில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்பொழுது மற்றொரு கார் அவர்களுக்கு எதிரே வேகமாக வந்துள்ளது. இதனால் விபத்து ஏற்படும் என்று உணர்ந்த காரின் ஓட்டுநர் வழியை மாற்ற முயற்சித்துள்ளார். இவர் நினைத்தது போலவே எதிரே வந்த ஓட்டுனரும் வழியை மாற்ற முயற்சித்த போது இரண்டு கார்களும் ஒன்றுடன் ஒன்று போதி விபத்து ஏற்பட்டுள்ளது என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.