பயங்கர தாக்குதல்: 17 பாதுகாப்பு வீரர்கள் சடலமாக மீட்பு – பிரதமர் மோடி கண்டனம்.!

Default Image

சத்தீஸ்கரில் உள்ள சுக்மா மாவட்ட வனப்பகுதியில், நக்சலைட்கள் பதுங்கியிருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மாவட்ட ரிசா்வ் படை, சிறப்பு பணிக் குழு, மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் சிறப்புப் பிரிவு ஆகியவற்றை சோ்ந்த 600 வீரா்கள் அப்பகுதியை நோக்கி சென்றனா். அப்போது கோரச்குடா மலைப் பகுதி அருகே சென்றபோது, அங்கு பதுங்கியிருந்த நக்ஸல்கள் பாதுகாப்புப் படையினரின் வாகனங்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டுள்ளனா். பின்னர் இருதரப்பினருக்கும் நீண்ட நேரமாக கடும் மோதல் ஏற்பட்டது. 

இதையடுத்து நீண்ட நேரமாக நடைபெற்ற இந்த தாக்குதலில், பல வீரர்கள் தொடர்புகொள்ள முடியாமல் போனது. இதில் படுகாயமடைந்த 14 வீரர்கள் ராய்ப்பூர் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனிடையே, துப்பாக்கி சூட்டின் போது மாயமான 17 வீரா்கள் நேற்று சடலமாக மீட்கப்பட்டு உள்ளனர். நக்சலைட்டுகளின் இந்த தாக்குதலை பிரதமர் நரேந்திர மோடி வன்மையாக கண்டித்துள்ளார். இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலால் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், 17 வீரர்கள் சடலமாக மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்