உ.பி-யில் பயங்கரம்.. மெட்ரோ ரயிலில் குதித்து சிறுவன் உயிரிழப்பு..!

Default Image

உ.பி நொய்டாவில் மெட்ரோ ரயிலின் முன் குதித்து 16 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உ.பி : நொய்டாவின் ப்ளூ லைனில் உள்ள கோல்ஃப் கோர்ஸ் சாலை மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயிலில் விழுந்து சிறுவன் உயிரிழந்துள்ளான். ரயில் நிலையத்தில் அமைதியாக அமர்ந்திருந்த அந்த சிறுவன் திடீரென ரயில் மீது விழுந்து பலத்த காயமடைந்தான்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக காயமடைந்த சிறுவனை டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அந்த சிறுவன் உயிரிழந்தான். சிறுவன் இறந்தது குறித்து அவனது உறவினருக்கு தகவல் அனுப்பப்பட்டது.

இச்சம்பவம் குறித்து குடும்ப உறுப்பினர்களிடம் நடந்த விசாரணையில் அந்த சிறுவன் எதற்காக இவ்வாறு செய்தான் என்று தெரியவில்லை ஆனால் அவன் ஏதோ வருத்தத்தில் இருந்ததாக தெரிவித்தனர். உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்